கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி திடீர் போராட்டம்
சேலத்தில் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி திடீர் போராட்டம் நடத்தினா்.
சேலம்
சேலம் கந்தம்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளி பட்டறை தொழிலாளி சக்கரவர்த்தி இருசான் (வயது 37). இவருடைய மனைவி சாரதா (35). இவர்களுக்கு கிஷோர் (13), பிரசாந்த் (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் ஒருவர் காம்பவுண்டு சுவர் கட்டுவதாகவும், இதுதொடர்பாக போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சக்கரவர்த்தி இருசான் நேற்று தனது மனைவியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எங்களது நிலத்தை அபகரித்து சுற்றுசுவர் கட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பிறகு கணவன்- மனைவி இருவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தம்பதி போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story