அவரைக்காய் விளைச்சல் அமோகம்


அவரைக்காய் விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 24 Jun 2021 7:08 PM IST (Updated: 24 Jun 2021 7:08 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் பகுதியில் அவரைக்காய் அமோகமாக விளைந்துள்ளது.

கம்பம்:

கம்பம், சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி காமயகவுண்டன்பட்டி, மணிகட்டி ஆலமரம், காட்டு பள்ளிவாசல், புதுக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் எள், மொச்சை, அவரை, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

 அவ்வப்போது பெய்த மழையினால் பயிர்கள் செழித்து வளர்ந்தன. குறிப்பாக அவரைக்காய் அமோகமாக விைளச்சல் அடைந்தது. தற்போது அவரைக்காய் பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் தோட்டங்களில் குவியல், குவியலாக அவரைக்காய்களை குவித்து வைத்துள்ளனர்.

 அதிக விளைச்சல் ஒரு புறம் இருக்க, மற்றொரு புறத்தில் அவரைக்காய்களை வாங்குவதற்கு வியாபாரிகள் கம்பம் பகுதிக்கு வருவதில்லை. இங்கு விளைகிற அவரைக்காய்கள், கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுவது வழக்கம். 

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கேரள வியாபாரிகள் அங்கு வருவதில்லை. இதனால் விலை  வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ அவரைக்காய் ரூ.45-க்கு விற்பனை ஆனது. 

ஆனால் இந்த ஆண்டு கிலோ ரூ.15 முதல் ரூ.20-க்கு விற்பனை ஆகி வருகிறது. அவரைக்காய் விலைவீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story