மாநகராட்சி அலுவலகம் முன்பு பெண் தர்ணா
திண்டுக்கல் மாநகராட்சியில் வாடகை பாக்கி தரக்கோரி பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்தவர் சகாயராஜ். சரக்கு வாகன டிரைவர். இவருடைய மனைவி லட்சுமி. இந்த நிலையில் நேற்று லட்சுமி, மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு (2020) ஊரடங்கு அமலில் இருந்தது. அந்த சமயத்தில் மாநகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி கடைகள் நடத்தப்பட்டது. இதற்காக சரக்கு வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டது.
அதில் எனது கணவரின் சரக்கு வாகனமும் அடங்கும். ஒரு நாளைக்கு ரூ.1,100 வாடகையாக தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து 45 நாட்கள் நடமாடும் காய்கறி கடைக்காக எங்கள் வாகனத்தை மாநகராட்சி அதிகாரிகள் வாடகைக்கு எடுத்தனர்.
அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகையாக மாநகராட்சி சார்பில் செலுத்தப்பட்டது. மீதமுள்ள தொகை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டதும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை அந்த தொகை எனக்கு வழங்கப்படவில்லை.
எனவே வாடகை பாக்கியை உடனடியாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டார். இதற்கிடையே அங்கு வந்த மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், லட்சுமியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது விரைவில் அவருக்கான வாடகை பாக்கியை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து லட்சுமி போராட்டத்தை கைவிட்டார்.
Related Tags :
Next Story