மேலும் 6 ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மேலும் 6 ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுகுளத்தூர்,
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மேலும் 6 ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய ஹபீப் முகம்மது என்பவர் பள்ளி மாணவி களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் போலீசாரின் விசாரணையில் ஹபீப் முகம்மது கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் மேலும் 6 ஆசிரியர்களை முதுகுளத்தூர்- பரமக்குடி மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் வைத்து தனித்தனியாக குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் தலைமையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணை
மேலும் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் ஹபீப் முகம்மது பாடம் நடத்திய மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோரை ரகசிய இடத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பள்ளி தாளாளர், முதல்வரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story