இலங்கை அகதி திருச்சியில் இறந்தார்


இலங்கை அகதி திருச்சியில் இறந்தார்
x
தினத்தந்தி 24 Jun 2021 10:05 PM IST (Updated: 24 Jun 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடியில் கைதான இலங்கை அகதி திருச்சியில் இறந்தார்.

ராமநாதபுரம், 
இலங்கை அக்கரைபட்டு சின்ன செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது உசேன் மகன் முகம்மதுஅலி (வயது45). இவர் சட்டவிரோதமாக உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்து தங்கி இருந்ததாக ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி போலீசார் கடந்த 2020-ம்ஆண்டு கைது செய்தனர். இவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த முகம்மது அலி நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இதுதொடர்பாக திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story