கொரோனாவில் இறப்போர் எண்ணிக்கை குறைகிறது
கொரோனாவில் இறப்போர் எண்ணிக்கை குறைகிறது
கோவை
கோவை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் நேற்று 756 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 808 ஆக உயர்ந்தது.
இதுதவிர கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,151 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 592-ஆக உள்ளது.
கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 7,248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் கொரோனாவுக்க சிகிச்சை பெற்று வந்த 12 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,968 ஆக உயர்ந்தது.
நேற்று முன்தினம் 25 பேர் இறந்த நிலையில், நேற்று கொரோனாவுக்க 12 பேர் இறந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனாவில் இறப்போர் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை குறையும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 138 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக் கை 27 ஆயிரத்து 726 ஆக உயர்ந்து உள்ளது.
நேற்று 345 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் இதுவரை 26 ஆயிரத்து 604 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று இறந்தார். இதன் மூலம் இதுவரை கொரோனாவால் 155 பேர் இறந்தனர். தற்போது 967 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மொத்தம் உள்ள 340 ஆக்சிஜன் படுக்கைகளில் 173 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 167 படுக்கைகள் காலியாக இருக்கிறது.
Related Tags :
Next Story