முதியவரிடம் பணம் பறித்த 3 பேர் கைது


முதியவரிடம் பணம் பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2021 10:24 PM IST (Updated: 24 Jun 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

முதியவரிடம் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்

விருதுநகர்
விருதுநகர் பாண்டியன் நகர் தங்கமணி காலனியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 67). இவர் அங்கு பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த தனுஷ், சுப்புராஜ்(27), சந்திரன் என்ற சாது சந்திரன்(43) ஆகிய 3 பேரும் வந்து பணம் கேட்டு மிரட்டினர்.
மேலும் அவரிடமிருந்து ரூ.200-ஐ பறித்ததுடன் கடையில் இருந்த கண்ணாடி பாட்டில்களையும் சேதப்படுத்தி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி நடராஜன் கொடுத்த புகாரின்பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனுஷ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story