பட்டாசு விபத்தில் பலியான கர்ப்பிணியின் உடல் பாகம் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு
பட்டாசு விபத்தில் பலியான கர்ப்பிணியின் உடல் பாகம் 4 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது
தாயில்பட்டி
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கலைஞர் காலனியில், கடந்த 21-ந் தேதி வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த செல்வமணி, சூர்யா, கற்பகவள்ளி, மற்றும் 5 வயது சிறுவன் ரொகோபியா சல்மான் ஆகியோர் வெடி விபத்தில் பலியாகினர். இவர்களின் மூவர் உடல் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் நாலு மாத கர்ப்பிணி கற்பகவள்ளியின் உடல் சிதறிய பாகங்கள் வீட்டின் முன்புறத்தில் உள்ள மரக்கிளைகள், மின் வயர்கள், ரோட்டில், சிதறிக் கிடந்தன. சிதறிய பாகங்களை போலீசார் சேகரித்தனர். மீதி பாகங்கள் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நான்கு தினங்களுக்கு பிறகு நேற்று தனியார் கல்யாண மண்டபம் பின்புறம் அருகே உள்ள குடியிருப்பில் வசிப்பவர்கள் துர்நாற்றம் வீசுவதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், தாயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி சந்தானம், ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது உடல் சிதறி பலியான கற்பகவள்ளியின் உடலின் ஒரு பாகம் வேலி காட்டில் கிடப்பதை கண்டனர். அதனை மீட்டு ஊரார் முன்னிலையில் எரித்தனர்.
Related Tags :
Next Story