பேரணாம்பட்டு அருகே ரூ.30 கோடியில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பணிகள்
பேரணாம்பட்டு அருகே ரூ.30 கோடியில் நடைபெற்றுவரும் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பணிகளை மாவட்ட வருவாய அலுவலர் பார்த்திபன் ஆய்வு செய்தார்.
பேரணாம்பட்டு-
மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
பேரணாம்பட்டு தாலுகாவில் நேற்று இரண்டாவது நாள் ஜமாபந்தி மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. இதில் மேல் பட்டி மற்றும் உள்வட்ட கிராமங்களான எம்.வி.குப்பம், அழிஞ்சிகுப்பம், ராஜக்கல், மேல் கொத்தகுப்பம், சொக்கரிஷிகுப்பம், பொகளூர், பரவக்கல், செண்டத்தூர், கார்க்கூர், பல்லல குப்பம், கொத்தமாரி குப்பம் உள்ளிட்ட 16 கிராமங்களுக்கான கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது.
தொடர்ந்து பேரணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி கிராமத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 30 கோடி செலவில் 304 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பணிகளையும், பத்தலப்பல்லி அணை திட்டப் பணிகள், நரிக்குறவர் குடியிருப்பு, பசுமை வீடுகள் திட்டத்தின் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.
குறைகள் கேட்டார்
பின்னர் நரிக்குறவர்கள் வசிக்கும் குடிசைப் பகுதிக்கு சென்று அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பேரணாம்பட்டு தாசில்தார் கோபி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார்கள் வடிவேல், சீனிவாசன், சங்கர், ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, கோபி, குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் நேதாஜி, உதவி நிர்வாக பொறியாளர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story