பந்தலூர் அருகே ஆதிவாசி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி
பந்தலூர் அருகே ஆதிவாசி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பந்தலூர்,
பந்தலூர் அருகே உள்ள கிளன்ராக் ஆதிவாசி காலனியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறையினர் ஆதிவாசி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
இந்த முகாமில் பழங்குடியினநல வருவாய் ஆய்வாளர் காமு, மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு காவலர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாம் முடிந்து 2 ஜீப்களில் சுகாதாரத்துறையினர் மற்றும் அதிகாரிகள் பந்தலூருக்கு சென்றனர்.
கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சாலை சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் நடுவழியில், ஜீப் சேற்றில் சிக்கி கொண்டது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் நடந்தே பந்தலூருக்கு சென்றனர்.
Related Tags :
Next Story