ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு 23 பேர் பலி
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு 23 பேர் பலி
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 103 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிைலயில், நேற்று மேலும் 96 பேருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 744 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று கொரோனாவுக்கு 15 பேர் உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று 59 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 574 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.
Related Tags :
Next Story