2 வது நாளாக போலீசார் வாகன சோதனை மதுபாட்டில்கள் பறிமுதல் 21 பேர் கைது


2 வது நாளாக போலீசார் வாகன சோதனை மதுபாட்டில்கள் பறிமுதல் 21 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2021 11:25 PM IST (Updated: 24 Jun 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

2-வது நாளாக போலீசார் நடத்திய வாகன சோதனையில் கேரள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி

2-வது நாளாக போலீசார் நடத்திய வாகன சோதனையில் கேரள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாகன சோதனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்று அதிகமாக உள்ளதால் கோவை யில் மதுக்கடைகள் திறக்கவில்லை. 

இதற்கிடையில் கேரளாவில் மதுக்கடைகள் கடந்த வாரம் திறக்கப்பட்டது. இதனால் கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து மதுபிரியர்கள் கேரளாவிற்கு படையெடுக்க தொடங்கினர்.

இந்த நிலையில் சட்டவிரோதமாக கேரளாவில் இருந்து மதுபாட்டில் களை வாங்கி வரும் நபர்களை பிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார். 

அவரது உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு தமிழ்மணி மேற்பார்வையில் தாலுகா இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் போலீசார்  2-வது நாளாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

21 பேர் கைது

தமிழக-கேரள எல்லையில் உள்ள நடுப்புணி, கோபாலபுரம், ஜமீன் காளியாபுரம் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் தனி, தனி குழுக்க ளாக பிரிந்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். போலீசார் சாதாரண உடையில் வாகன சோதனையில் ஈடுபடுவதை பார்த்ததும், மதுபிரியர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். தாலுகா போலீஸ் நிலையத்தில் 16 வழக்குகளும், வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. 

இதுதொடர்பாக போலீசார் 21 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 14 லிட்டர் கள், 65.5 லிட்டர் கேரள மதுபாட்டில்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story