செலக்கரிச்சலில் 115 பேருக்கு கொரோனா பரிசோதனை
செலக்கரிச்சலில் 115 பேருக்கு கொரோனா பரிசோதனை
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் செலக்கரிச்சல் பகுதியில் பொது மக்கள் மற்றும் கோழிப்பண்ணையில் உள்ள தொழிலாளர்கள என மொத்தம் 115 பேருக்கு சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பவித்ரா மற்றும் பலர் கொண்ட மருத்துவக்குழுவினர் கொரோனா பாிசோதனை மேற்கொண்டனர்.
மேலும் அவர்கள் கொரோனா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்கள்.
அதுபோன்று சுல்தான்பேட்டை வட்டார மருத்துவ அதிகாரி வனிதா உத்தரவின்பேரில் வதம்பச்சேரி, சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதில் 500 பேர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டனர். இதற்கான ஏற்பாடு களை சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story