குடிபோதையில் இருப்பவர்களை அடிக்கக்கூடாது. போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவு
குடிபோதையில் இருப்பவர்களை அடிக்கக்கூடாது என்று போலீசாருக்கு, சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
வாணியம்பாடி
போலீஸ்நிலையத்தில் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது டவுன், தாலுகா, மகளிர், போக்குவரத்து போலீஸ் நிலைய போலீசார், சப்-இன்ஸ்பெக்டர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
பொதுமக்கள் போலீஸ் நிலையங்களுக்கு வரும் போது அவர்களிடம் முறையாக நடந்து கொண்டு, அவர்கள் கொடுக்கும் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அடிக்கக்கூடாது
மேலும் குடிபோதையில் இருப்பவர்களை தாக்க கூடாது எனவும், அவர்களை வீடியோ பதிவு செய்யும்படியும் கூறினார். தொடர்ந்து அம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற ஆய்வு செய்தார். அங்கும் போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
Related Tags :
Next Story