சித்தப்பா இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
சித்தப்பா இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
அரக்கோணம்
அரக்கோணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த செல்வகுமாரின் மகன் திலீப் (வயது 25). இவரின் சித்தப்பா சமீபத்தில் உயிரிழந்ததால் திலீப் சோகத்தில் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் சரியாக சாப்பிடாமலும், யாரிடமும் பேசாமலும் இருந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, திலீப் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரக்கோணம் டவுன் போலீசார், அவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story