கடவூர் காப்புக்காடு பகுதிகளை தேவாங்குகளுக்கான சரணாலயமாக மாற்ற நடவடிக்கை கலெக்டர் தகவல


கடவூர் காப்புக்காடு பகுதிகளை தேவாங்குகளுக்கான சரணாலயமாக மாற்ற நடவடிக்கை கலெக்டர் தகவல
x
தினத்தந்தி 25 Jun 2021 12:18 AM IST (Updated: 25 Jun 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

கடவூர் காப்புக்காடு பகுதிகளை தேவாங்குகளுக்கான சரணாலயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.

கரூர்
வாலெறும்பு அருவி
கரூர் மாவட்டம், கடவூர் பகுதியில் தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் வலையப்பட்டியிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் டி.இடையப்பட்டியில் காப்புக்காட்டில் வாலெறும்பு அருவி உள்ளது. இந்த அருவியினை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் நடந்து சென்று கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். பின்னர் அருவியில் வந்த தண்ணீரை கலெக்டர் குடித்துப்பார்த்து ஆய்வு செய்தார். 
சரணாலயம் அமைக்கப்படும்
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், வாலெறும்பு அருவியில் பொதுவாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக அளவில் நீர் வரத்து இருக்கும் என்று வனத்துறை அலுவலர்களால் கூறப்படுகின்றது. மேலும் இங்கு அரியவகை உயிரினமான தேவாங்குகள் உள்ளன. கடந்த 2016-17-ம் ஆண்டு தேவாங்கு கணக்கெடுப்பின் படி 3,200 எண்ணிக்கையிலான தேவாங்குகள் இங்கு உள்ளன. இதனால் காப்புக்காட்டினை தேவாங்குகளுக்கான சரணாலயமாக மாற்றுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்து 1 வருட காலத்திற்குள் சரணாலயமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும், மேலும், இந்த வனப்பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கும் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். 
இந்த நிகழ்வின்போது, வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் வன அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story