அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே தோட்டக்குறிச்சி தளவாப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதேபோல் வேலாயுதம்பாளையம், மகாமாரியம்மன் கோவில் நாணப்பரப்பு மாரியம்மன் கோவில், மண்மங்கலம் புதுகாளியம்மன் கோவில், கடம்பங்குறிச்சி மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. கொரோனா ஊரடங்கு என்பதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட கழுகூரில் மகாகருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு பால், விபூதி, பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
Related Tags :
Next Story