மூதாட்டியை அரிவாளை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
மூதாட்டியை அரிவாளை காட்டி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
குளித்தலை
குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் சுலக்சனா (வயது 65). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஹரிசங்கர் (35) என்பவருக்கும் பண வரவு செலவு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஹரிசங்கர் மதுபோதையில் சுலக்சனாவை திட்டி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சுலக்சனா அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிசங்கரை கைது செய்தனர். பின்னர் அவர் குளித்தலை குற்றவியல் நீதிமன்றம் எண்-2-ல் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஹரிசங்கர், சுலக்சனாவை அரிவாளை காட்டி மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story