நாமக்கல் மாவட்டத்தில் 257 பேருக்கு கொரோனா-6 பேர் பலியானதால் பொதுமக்கள் அதிர்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
நாமக்கல்:
257 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 43 ஆயிரத்து 265 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த பிற மாவட்டங்களை சேர்ந்த 11 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 254 ஆக குறைந்தது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 511 ஆக அதிகரித்து உள்ளது.
6 பேர் சாவு
இதற்கிடையே நேற்று மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 289 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 40 ஆயிரத்து 919 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 2ஆயிரத்து 193 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 393 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த நாமக்கல், உலகபாளையம், நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி, மணப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 6 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதனால் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 399 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story