கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த ராமதாசின் மனைவி பஞ்சவர்ணம் (வயது 60). இவர் நேற்று காலை முதலே வீட்டில் இல்லாததால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை தேடினர். இந்நிலையில் நேற்று மதியம் கல்லூரி பாலம் அருகே உள்ள கிணற்றின் அருகே அவரின் துண்டு மற்றும் செருப்பு கிடந்துள்ளது. இதனை பார்த்தவர்கள் அவரின் குடும்பத்தினர் மற்றும் கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அப்பகுதி மக்களில் சிலர் கிணற்றில் இறங்கி தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் கிணற்றில் இருந்து பிணமாக பஞ்சவர்ணம் மீட்கப்பட்டார். இதனையடுத்து கீழப்பழுவூர் போலீசார், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம், என்று தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார், குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story