நெல்லையில் மாயமான ரூ.5 லட்சம் செல்போன்கள் மீட்பு


நெல்லையில் மாயமான ரூ.5 லட்சம் செல்போன்கள் மீட்பு
x
தினத்தந்தி 25 Jun 2021 2:38 AM IST (Updated: 25 Jun 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மாயமான ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டன.

நெல்லை:
நெல்லை மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் செல்போன்கள் திருட்டு, வழிப்பறி, மாயமானதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக, மாநகர சைபர் கிரைம் போலீசார் செல்போன்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி போலீசார் கடந்த 2020-ம் ஆண்டு பெறப்பட்ட 6 மனுக்கள் மற்றும் இந்த ஆண்டு பெறப்பட்ட 38 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான 43 செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளன. அந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நெல்லை மாநகர போலீஸ் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவீன்குமார் அபிநபு கலந்து கொண்டு, செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர்கள் ராஜராஜன் (சட்டம் - ஒழுங்கு), சுரேஷ்குமார் (குற்றம் மற்றும் போக்குவரத்து), நுண்ணறிவு பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், சைபர் கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி, தொழில்நுட்ப பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்..

Next Story