ஆலங்குளம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்ெகாலை


ஆலங்குளம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்ெகாலை
x
தினத்தந்தி 25 Jun 2021 3:00 AM IST (Updated: 25 Jun 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.

ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள மருதபுரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் வேல்முருகன் (வயது 34). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஊருக்கு வந்து விட்டார். இங்கு தனது தந்தையுடன் சேர்ந்து விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் வேல்முருகனுக்கும், அவரது மனைவி சிந்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுள்ளது. இதன் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிந்து கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் ஊரான அருணாசலபேரிக்கு தனது குழந்தையுடன் சென்று விட்டார். இதையடுத்து வேல்முருகன் தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்தார். அதற்கு சிந்து மறுத்துவிட்டார். இதனால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்த வேல்முருகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story