கடையநல்லூரியில் நாளை மின்தடை
கடையநல்லூரியில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் மின்பகிர்மான கோட்ட பொறியாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மின்னூட்ட பாதைகளில் மின் களப்பணியாளர்கள் மூலம் மின் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடந்தது. அதன்படி 106 இடங்களில் மின்பாதைக்கு அருகில் இருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டன. 9 மின்மாற்றியில் காற்று திறப்பான்களில் பராமரிப்பு பணிகள் நடந்தன. பழுதடைந்த மின்கம்பி இணைப்புகளும், தாழ்வான மின்பாதை கம்பிகளும், சாய்வான மின்கம்பங்களும் சீரமைக்கப்பட்டன.
கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இதுபோன்று பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும். நாளை (சனிக்கிழமை) கடையநல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கடையநல்லூர் பகுதிகளில் மின்தடை இருக்கும் என்று கடையநல்லூர் மின்பகிர்மான கோட்ட செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story