வண்டலூர், கூவத்தூரி்ல் இன்று மின்தடை


வண்டலூர், கூவத்தூரி்ல் இன்று மின்தடை
x
தினத்தந்தி 25 Jun 2021 9:41 AM IST (Updated: 25 Jun 2021 9:41 AM IST)
t-max-icont-min-icon

வண்டலூர், கூவத்தூரி்ல் இன்று மின் வினியோகம் நிறுத்தப்படும்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கோட்டத்திற்குட்பட்ட உயர் மின்னழுத்த பாதைகளில் இன்று (வெள்ளிக்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மறைமலைநகர், புதுப்பாக்கம் தொழிற்பேட்டை பகுதிகள், சோனலூர், வண்டலூர், கேளம்பாக்கம் சாலை, மண்ணிவாக்கம் கே.கே.நகர், கரசங்கால், காயரம்பேடு, கன்னிவாக்கம், தர்காஸ், மாதா கோவில் தெரு, கே.எஸ்.எஸ். நகர் மற்றும் கேளம்பாக்கம் நகரம் போன்ற பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்

இதேபோல ஊனமாஞ்சேரி துணை மின் நிலையத்தில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே கொளப்பாக்கம், ஊனமாஞ்சேரி, போலீஸ் அகாடமி, கிரஷர், நெடுங்குன்றம், ஆலப்பாக்கம், வண்டலூர் மிருகக்காட்சி சாலை, காரணைப்புதுச்சேரி, ஒட்டேரி, மற்றும் ஊரப்பாக்கத்தின் ஒரு பகுதி போன்ற பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மறைமலைநகர் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் பொலம்பாக்கம் துணை மின்நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர சிறப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே துணை மின்நிலையத்துக்குட்பட்ட பேரம்பாக்கம், பெருங்்கரணை, தண்டலம், பருக்கல், வேட்டராம்பாக்கம், இரும்புலி உட்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று அச்சரப்பாக்கம் மின் செயற்பொறியாளர் கிறிஸ்டோபர் லியோராஜ் தெரிவித்துள்ளார்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கோட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம், கடுகுப்பட்டு, அடையாளச்சேரி துணை மின்நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையங்களுக்குட்பட்ட சாத்தமை, பாக்கம், ஆஸ்பிட்டல் ரோடு, ஆனந்த நகர், சிறுகளத்தூர், அய்யனார் கோவில், மோச்சேரி, சாத்தமங்களம், நீலமங்களம், குன்னத்தூர், கல்குளம், நெல்வாய், கூவத்தூர், கானத்தூர், கீழார் கொல்லை, நெடுமரம், தட்டாம்பட்டு, நெற்குணப்பட்டு, கிளியா நகர், ஒட்டக்கோவில், பசுவங்கரணை, ஆலப்பாக்கம் உட்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மதுராந்தகம் மின் செயற்பொறியாளர் கிருபானந்தன் தெரிவித்துள்ளார்.

Next Story