தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 7 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,:
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் ரோந்து
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவுப்படி கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் 4பேர் கைது
அதன்படி நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் அய்யப்பன் மகன் விக்னேஷ் (வயது 25), தென்பாகம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அய்யப்பநகரைச் சேர்ந்த சொரிமுத்து மகன் கணேசன் (52), முத்தையாபுரத்தில் முள்ளக்காட்டைச் சேர்ந்த நசரேன் மகன் எடிசன் (51), தாளமுத்துநகரில் சமர்வியாஸ் நகரைச் சேர்ந்த குணசேகரன் மகன் சுடலைமணி (23) ஆகியோர் கஞ்சா விற்றது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் 3 பேர் சிக்கினர்
இதேபோன்று செய்துங்கநல்லூரில் அதே பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் மகாராஜன் (21), ஏரலில் அதே பகுதியைச் சேர்ந்த இசக்கி மகன் வினோத் (20) மற்றும் சாயர்புரத்தில் செந்தியம்பலம் பகுதியைச் சேர்ந்த சோலையப்பன் மகன் ஆத்தியப்பன் (28) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இந்த 7 பேரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story