கூடலூர் அருகே பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் ஆர்.டி.ஓ. வழங்கினார்
கூடலூர் அருகே பழங்குடியின மக்களுக்கு ஆர்.டி.ஓ. நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூடலூர் :
கூடலூர் அருகே உள்ள பளியன்குடியிருப்பு பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட நிர்வாகம் நேரடியாக சென்று வழங்குகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பம் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கூடலூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் கருப்பையா ஆகியோர் பழங்குடியின மக்களிடம் சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, பழங்குடியின அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை ்பெற்று உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.கவுசல்யாவிடம் சமர்ப்பித்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பளியன்குடியிருப்பில் உள்ள பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.கவுசல்யா தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் 20 பள்ளி மாணவர்களுக்கு பழங்குடியின சான்று, 14 குடும்பத்தினருக்கு நலவாரிய அட்டை, 6 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி, மாவட்ட துணை தாசில்தார் குமரவேல் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story