நாசரேத்தில் பெயிண்டர் தற்கொலை
நாசரேத்தில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
நாசரேத்:
நாசரேத் - திருவள்ளுவர் காலனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மூக்கன் மகன் சிவசாமி (வயது 51). சிவசாமி பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், தர்மசீலன், தேவராஜ் என்ற 2 மகன்களும் புவனேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இதில் மகள் புவனேஸ்வரிக்கு திருமணம் செய்து கொடுத்து தனியாக வசித்து வருகிறார். அவருக்கு மதுப்பழக்கமும் இருந்துள்ளது. குடும்பத்தினர் மதுப்பழக்கத்தை நிறுத்துமாறு கோரியதால் மனம் உடைந்த அவர் நேற்று காலை தனது வீட்டில் குருணை மருந்து சாப்பிட்டு இறந்துள்ளார். இதுகுறித்து மகன் தர்மசீலன் நாசரேத் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story