கால்கள் இல்லாமல் பிறந்த அதிசய கன்றுக்குட்டி
திருக்கோவிலூர் அருகே கால்கள் இல்லாமல் பிறந்த அதிசய கன்றுக்குட்டி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூரை அடுத்த பழங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன் ராஜேந்திரன். விவசாயியான இவர் 20-க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருவதோடு, விவசாயமும் செய்து வருகிறார். இந்த நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான பசுமாடு ஒன்று நேற்று காலை அவரது வீட்டு தோட்டத்தில் கன்று ஈன்றது. ஆனால் அந்த கன்றுக்கு கால்கள் இல்லை. இதனால் அந்த கன்று அங்கும் இங்குமாக தவழ்ந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் செய்வதறியாது திகைத்தார். பின்னர் தாய் பசுவிடம் பால் எடுத்து அதை பாட்டிலில் அடைத்து கன்றுக்கு ஊட்டினார். பசுமாடு ஈன்ற கன்றுக்கு கால்கள் இல்லாத தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீபோல பரவியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து கால்கள் இல்லாத கன்றுக்குட்டியை பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story