அடையாள அட்டை பெற மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம்


அடையாள அட்டை பெற மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 25 Jun 2021 11:02 PM IST (Updated: 25 Jun 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

அடையாள அட்டை பெற மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜூன்.26-
புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் அடையாள அட்டை பெற்று, அதேசமயம் குடும்ப அட்டை பெறாதவர்களுக்கும் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. மேலும் இதுவரை அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்களிடமிருந்து அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அடையாள அட்டை பெறுவதற்கு ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பங்களை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும். மேலும் இதுகுறித்த விவரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை  மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story