ரேஷன் கடைகளில் குடியாத்தம் பகுதியில் பாமாயில், துவரம்பருப்பு தடுப்பாடு
குடியாத்தம் பகுதியில் ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு இல்லாமததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
குடியாத்தம்
துவரம் பருப்பு இல்லை
தமிழக அரசு ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாமாயில், துவரம்பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது குடியாத்தம் பகுதியில் உள்ள சில ரேஷன் கடைகளில் இந்த மாதம் 25-ந் தேதி ஆகியும் பாமாயில் மற்றும் துவரம்பருப்பு விநியோகம் செய்யவில்லை.
இது குறித்து பொதுமக்கள் பல முறை ரேஷன் கடைக்கு வந்து பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இந்த மாதம் முடிய ஒரு சில தினங்களே இருப்பதால் இந்த மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம்பருப்பு கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கேட்டால் ஓரிரு தினங்களில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வர வாய்ப்புள்ளதாகவும், அதன்பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர். ஆனால் ஓரிரு தினங்களே இருப்பதால் இந்த மாதம் ரேஷன் கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கிடைப்பது சந்தேகமே என கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இம்மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம்பருப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story