விக்கிரவாண்டி அருகே கைப்பந்து விளையாடிய வாலிபர் மயங்கி விழுந்து சாவு அரசு ஆஸ்பத்திரி கண்ணாடி உடைப்பு; உறவினர்கள் ஆத்திரம்


விக்கிரவாண்டி அருகே கைப்பந்து விளையாடிய வாலிபர் மயங்கி விழுந்து சாவு அரசு ஆஸ்பத்திரி கண்ணாடி உடைப்பு; உறவினர்கள் ஆத்திரம்
x
தினத்தந்தி 25 Jun 2021 11:05 PM IST (Updated: 25 Jun 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே கைப்்பந்து விளையாடிய வாலிபர் மயங்கி விழுந்து இறந்தார். உரிய சிகிச்சை அளிக்கவில்லை என கூறி ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி கண்ணாடியை உடைத்தனர்.

விக்கிரவாண்டி,

மயங்கி விழுந்த வாலிபர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தாஸ் மகன் அய்யனார் என்கிற நிஜந்த் (வயது 24). டிப்ளமோ படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்த இவர் நேற்று முன்தினம் இரவு ராதாபுரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் கைப்்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அய்யனார் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய நண்பர்கள் அய்யனாரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர் மற்றும் செவிலியர்கள் அய்யனாருக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததோடு, மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சாவு

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அய்யனார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனால் பதறிய அவருடைய நண்பர்கள் இதுபற்றி தாசுக்கு தகவல் தெரிவித்தனர். மகன் உயிரிழந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த தாசும் மயங்கி கீழே விழுந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். 
அப்போது மருத்துவமனையில் டாக்டர் மற்றும் செவிலியர்கள் தாசுக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததோடு, அவரையும் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என கூறி டாக்டர், செவிலியர்களை திட்டி தாக்க முயன்றனர். இதனால் பயந்து போன டாக்டர் மற்றும் பணியாளர்கள் ஒரு அறைக்குள் சென்று, உள்பக்கமாக தாழிட்டு கொண்டனர். 

ஆஸ்பத்திரி கண்ணாடி உடைப்பு

இதில் மேலும் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை கதவு கண்ணாடிகளை அடித்து நொறுக்கிச் சென்றனர். இதற்கிடையே தாஸ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து ராதாபுரம் அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி கொடுத்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story