கரும்பை கையில் பிடித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தலைஞாயிறு சர்க்கரை ஆலையை இயக்கக்கோரி சர்க்கரை ஆலை முன்பு கரும்பை கையில் பிடித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல்மேடு:
தலைஞாயிறு சர்க்கரை ஆலையை இயக்கக்கோரி சர்க்கரை ஆலை முன்பு கரும்பை கையில் பிடித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு சர்க்கரை ஆலையை இயக்கக்கோரி கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கரும்பை கையில் பிடித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் காசிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன், காவிரி டெல்டா பாசனதாரர் சங்க தலைவர் குரு.கோபிகணேசன், இயற்கை விவசாயி ராமலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கோஷமிட்டனர்
ஆர்ப்பாட்டத்தில் நான்கு ஆண்டுகளாக மூடியிருக்கும் சர்க்கரை ஆலையை இந்த ஆண்டு திறக்கக் கோரியும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் அறிவிக்க வேண்டும். சர்க்கரை ஆலையில் உள்ள தொழிலாளர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாத சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும், கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டுவதை நிறுத்த கோருவது, 2021-ம் ஆண்டுக்கான கரும்பினை அனுப்பி 3 மாதங்களாகிய நிலையில் எம்.ஆர்.கே., அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைகள் கரும்புக்கான பணத்தை உடனே வழங்க வேண்டும். தலைஞாயிறு. சர்க்கரை ஆலையை கடந்த ஆட்சியாளர்கள் திட்டமிட்டே நஷ்டப்படுத்தி மூடியது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆலைக்கு தனி நிர்வாக இயக்குனரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். சர்க்கரை ஆலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story