பெண்ணை தாக்கி 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
கொல்லங்கோடு அருகே பெண்ணை தாக்கி 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அருகே பெண்ணை தாக்கி 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ஆலயத்துக்கு சென்றவர்
கொல்லங்கோடு அருகே வள்ளவிளையை சேர்ந்த ஜூட்ஸ் மனைவி உஷாராணி. இவர் தினமும் வீட்டின் அருகில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்வது வழக்கம். நேற்று காலை 6 மணி அளவில் வழக்கம் போல் ஆலயத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் உஷா ராணியை பின்தொடர்ந்து வந்தனர்.
அவர்களில் ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கி உஷா ராணியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றான். ஆனால் தங்க சங்கிலி அறுந்து கையில் வரவில்லை.
நகை பறிப்பு
உஷா ராணி சத்தம் போட்ட நிலையில் நகையை பிடித்து கொண்டு கொள்ளையனிடம் போராடினார். காலை வேளை என்பதால் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதை சாதகமாக பயன்படுத்திய அந்த நபர் நகையை பறித்து, உஷா ராணியை தாக்கி கீழே தள்ளிவிட்டு, தனது கூட்டாளியுடன் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றார். கொள்ளையன் தாக்கியதில் உஷா ராணிக்கு கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து கொல்லங்கோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story