தினத்தந்தி செய்தி எதிரொலி ஆபத்தான மரம் வெட்டி அகற்றம்


தினத்தந்தி செய்தி எதிரொலி ஆபத்தான மரம் வெட்டி அகற்றம்
x
தினத்தந்தி 25 Jun 2021 11:41 PM IST (Updated: 25 Jun 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி செய்தி எதிரொலி ஆபத்தான மரம் வெட்டி அகற்றம்

கணபதி

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 42-வது வார்டு பகுதியான சின்னவேடம்பட்டி பாரதி வீதியில் சாலையோரத்தில் ஒரு மரம் பட்டுப்போய் எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பயத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டு வந்தது. இது குறித்து அதிகாரிகளை சந்தித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

எனவே இது குறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப் பட்டது. அதன் பயனாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் இருந்த மரத்தை வெட்டி அகற்றி உள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, எந்த நேரத்திலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த மரத்தை வெட்டி அகற்றப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

பொதுமக்கள் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் எங்களது பாராட்டுக்கள் என்றனர். 


Next Story