6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று; ஒருவர் பலி
ராமநாதபுரத்தில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் ஒருவர் பலியானார்.
ராமநாதபுரம்,ஜூன்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் வெகுவாக குறைந்து வருவது தெரிந்ததே. ஆனால் இதற்கு அடுத்தபடியாக மாவட்டத்தில் பரவலாக கருப்பு பூஞ்சை தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பரமக்குடியை சேர்ந்த 57 வயது மதிக்கத்தக்க நபர் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகி விட்டதாகவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story