திருச்சி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருச்சி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
திருச்சி மாநகர்
திருச்சி நகரியம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி கோர்ட் வளாகம், அரசு மருத்துவமனை ரோடு, மேல வண்ணாரபேட்டை, கீழ வண்ணார பேட்டை, பாரதி நகர், வயலூர் ரோடு, பாரதிதாசன் நகர், பிஷப் ஹீபர் கல்லூரி பகுதி மற்றும் ஆபீசர் காலனி ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திருச்சி நகரிய மின்செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.
இதுபோல் திருச்சி ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அணைக்கரை முதல் பட்டுப்பூச்சி பூங்கா வரையும், திருவானைக்கோவில் துணை மின் நிலையத்தில் ஆதிசங்கரர் ஐ.டி.ஐ. செக்போஸ்ட், நம்பர்.1 டோல்கேட், மகாலட்சுமி நகர், மாருதி நகர், குறிஞ்சி நகர், எம்.ஆர்.ஆர். நகர், ராஜா நகர், பிரியா நகர், நாராயணா கார்டன், அகிலாண்டபுரம், கீரமங்கலம், பரஞ்சோதி நகர், வாழைகட்டை, கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படும்
சமயபுரம், முசிறி
வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் மூவானூர்- கீழூர், மாமரத்து கொட்டம், துடையூர், சுனைப்புகநல்லூர், பாண்டியபுரம், நெய்வேலி, சிலையாத்தி, ஈச்சம்பட்டி. புத்தனாம்பட்டி துணை மின் நிலையத்தில் பெரமங்கலம், சத்திரப்பட்டி, காலவாய்பட்டி, திருவெள்ளரை, பூனாம்பாளையம், சிறுகனூர் துணை மின் நிலையத்தில் ஊட்டத்தூர், நெய்குளம். சமயபுரம் துணை மின் நிலையத்தில் புறத்தாக்குடி, இருங்களுர், மகிழம்பாடி, இந்திரா நகர், புவனேஷ்வரி நகர், ஜெயா நகர், பாலாஜி நகர், எதுமலை ரோடு (மண்ணச்சநல்லூர் பகுதி) ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படும் என்று ஸ்ரீரங்கம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுபோல் முசிறி மின் கோட்டத்தில் உள்ள உயர் மின்அழுத்த பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளஉள்ளதால் தா.பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தும்பலம் மின் பாதையில் உள்ள ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கோணப்பம்பட்டி பகுதிகளிலும், தொட்டியம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட தொட்டியம் நகர் மின் பாதையில் உள்ள தொட்டியம் நகர், கொசவம்பட்டி, மகேந்திரமங்கலம், சீனிவாசநல்லூர், சித்தூர், வரதராஜபுரம் பகுதிகளிலும், வாழ்வேல்புத்தூர் மின்பாதையில் உள்ள நானாபட்டி, வேந்தன்பட்டி, மேய்க்கல்நாயக்கன்பட்டி பகுதிகளிலும், காட்டுப்புத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட முருங்கை மின்பாதையில் உள்ள தேவர்மலை, பிடாரமங்கலம், புதுபாளையம் பகுதிகளிலும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று முசிறி மின்கோட்ட செயற்பொறியாளர் ஆர்.அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
உப்பிலியபுரம்
உப்பிலியபுரம் பகுதியிலுள்ள கொப்பம்பட்டி மற்றும் தங்கநகர் துணைமின் நிலையங்களில் உயரழுத்த மின்பாதையில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சோபனபுரம், ஓசரப்பள்ளி, வலையப்பட்டி, பி.மேட்டூர், கல்லாத்துக்கோம்பை, சிறுநாவலூர், ரெட்டியாப்பட்டி, வடக்கிப்பட்டி, பச்சைமலைப்பகுதியிலுள்ள டாப்செங்காட்டுப்பட்டி, புதூர், பூதக்கால், தண்ணீர்பள்ளம், சோளமாத்தி, பெரியபக்களம், நல்லமாத்தி, மாயம்பாடி, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று துறையூர் கோட்ட மின் செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதுபோல் பன்னாங்கொம்பு, நடுப்பட்டி, புத்தாநத்தம் ஆகிய துணை மின்நிலையத்திற்குட்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மின்பாதைகளில் அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே பாலக்கருதம்பட்டி, பொய்கைப்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, ராயம்பட்டி, வடுகபட்டி குடியிருப்பு பகுதிகள், பொன்னம்பலம்பட்டி, துலுக்கம்பட்டி, சக்கம்பட்டி, எளமணம், குப்பானூர், கண்ணூத்து, புத்தாநத்தம், காவல்காரன்பட்டி, இடையபட்டி, கம்பிளியம்பட்டி, என்.இடையபட்டி, பிச்சம்பட்டி, சமத்துவபுரம், கழனிவாசல்பட்டி ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச் செல்வன் ெதரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story