சாலை விரிவாக்க பணிகளை கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை அருகே சென்னை- ஆந்திரா செல்லும் சாலை விரிவாக்க பணிகளை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை அருகே சென்னை- ஆந்திரா செல்லும் சாலை விரிவாக்க பணிகளை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.
சாலை விரிவாக்க பணி
ராணிப்பேட்டை அருகே சென்னை - ஆந்திரா செல்லும் நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணி மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சாலை விரிவாக்க பணியின் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம், வாகனங்கள் மாற்று சாலைகளில் செல்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் மின் தடையின்றி சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் மாற்றம் செய்யப்படுவது, குடிநீர் குழாய்கள் பாதிக்காத வண்ணம் குழாய்களின் பாதையை மாற்றி அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார்.
கலெக்டர் ஆய்வு
மேலும் இதனை தொடர்ந்து புதியதாக கட்டப்பட்டு வரும் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிட பணிகளை பார்வையிட்டு, கட்டுமான பணிகள் குறித்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்களிடம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story