18.7 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


18.7 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 26 Jun 2021 12:29 AM IST (Updated: 26 Jun 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் 18.7 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதார பணியாளர்களில் 4,035 பேரில், 3,411 பேருக்கு முதல் தவணையும், அதில் 2,472 பேருக்கு 2-வது தவணையும் என 84.5 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்கள் 7,451 பேரில், 4,487 பேருக்கு முதல் தவணையும், அதில் 2,469 பேருக்கு 2-வது தவணையும் என 60.2 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1,71,120 பேரில், 39,043 பேருக்கு முதல் தவணையும், அதில் 8,533 பேருக்கு 2-வது தவணையும் என 22.8 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட 45 வயதுக்குள் உள்ள 2,82,407 பேரில், 37,939 பேருக்கு முதல் தவணையும், அதில் 125 பேருக்கு 2-வது தவணையும் என 13.4 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தடுப்பூசி போட தகுதி வாய்ந்த மொத்தம் 4,53,527 பேரில், இதுவரைக்கும் 84,880 பேர் முதல் தவணையும், அதில், 13,599 பேர் 2-வது தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 18.7 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story