நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்தது
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 400-ஐ கடந்தது. மேலும் 228 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 43 ஆயிரத்து 511 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று மாவட்டத்தில் 228 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 739 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 261 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
இதனிடையே மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 399 பேர் பலியாகி இருந்தனர். இந்தநிலையில் நேற்று நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், வெண்ணந்தூர் மற்றும் காதப்பள்ளியை சேர்ந்த 2 பெண்கள், ஒரு முதியவர் உள்பட 6 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியாகினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை நேற்று 400-ஐ கடந்தது. அதாவது மாவட்டத்தில் இதுவரை 405 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
இதுவரை 41 ஆயிரத்து 180 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் 2 ஆயிரத்து 154 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story