புதிதாக 79 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 44,216 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 42,912 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 79 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 754 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு பலி ஏதும் இல்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் 1,528 படுக்கைகள் உள்ள நிலையில் 233 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1,295 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,853 படுக்கைகள் உள்ளநிலையில் 66 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,787 படுக்கைகள் காலியாக உள்ளன. நேற்று மாவட்ட பட்டியலில் 19 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மாநில பட்டியலில் 79 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 1.5 ஆகும்.
Related Tags :
Next Story