திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் அனாதையாக நின்ற காரால் பரபரப்பு
திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் அனாதையாக நின்ற காரால் பரபரப்பு ஏற்பட்டது.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் அருகே பைபாஸ் ரோட்டில் கார் ஒன்று வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது. அந்த கார் சென்னை பதிவு எண் கொண்டது.
இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியை பொதுமக்கள் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், அனாதையாக நின்ற காரை சோதனை செய்தனர். அந்த காரின் சாவி அதிலேயே இருந்தது. மேலும் காரில் பொருட்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த காரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில் அந்த கார் சென்னையில் செயல்பட்டு வரும் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. ஆனால் அந்த காரை யார் இங்கு ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை.
இதுதொடர்பாக சென்னை டிராவல்ஸ் நிறுவனத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்த பிறகு தாளன், இந்த கார் எப்படி இங்கு வந்தது என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். அனாதையாக நின்ற இந்த காரால் திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story