3 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


3 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 26 Jun 2021 12:45 AM IST (Updated: 26 Jun 2021 12:45 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் 3 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என கலெக்டர் கூறினார்.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3 லட்சத்து 12 ஆயிரத்து 530 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 74 ஆயிரத்து 158 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24-ந் தேதி ஒரே நாளில் 13 ஆயிரத்து 57 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். இனிவரும் நாட்களிலும் மாவட்டத்திற்கு வரும் தடுப்பூசி ஒதுக்கீட்டினை பொருத்து தேவை அதிகமுள்ள இடங்களில் கூடுதல் தடுப்பூசி மருந்து இருப்பு வைத்துக்கொள்ளவும், சிறப்பு தடுப்பூசி முகாம் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story