கஞ்சா விற்றவர் கைது
கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
கரூர் பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கரூர், வெங்கமேடு, தாந்தோணிமலை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது வெங்கமேடு ெரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கந்தன் என்கிற கந்தசாமி (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் ெசய்யப்பட்டன.
Related Tags :
Next Story