அடுத்த முதல்-மந்திரி சித்தராமையா என மாட்டின் மீது வாசகம் எழுதிய ஆதரவாளர்கள்


அடுத்த முதல்-மந்திரி சித்தராமையா என மாட்டின் மீது வாசகம் எழுதிய ஆதரவாளர்கள்
x
தினத்தந்தி 26 Jun 2021 1:55 AM IST (Updated: 26 Jun 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

கதக் அருகே அடுத்த முதல்-மந்திரி சித்தராமையா என மாட்டின் மீது ஆதரவாளர்கள் வாசகம் எழுதியுள்ளனர்.

கதக்:

எம்.எல்.ஏ.க்கள் கருத்து

  கர்நாடக சட்டசபைக்கு வருகிற 2023-ம் ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. இந்த நிலையில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் சித்தராமையா முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ. கூறி இருந்தார்.

  அவரை தொடர்ந்து ராகவேந்திரா ஹித்னால், ராமப்பா, அகண்ட சீனிவாசமூர்த்தி ஆகிய எம்.எல்.ஏ.க்களும் அடுத்த முதல்-மந்திரியாக சித்தராமையா தான் வர வேண்டும் என்று தங்களது கருத்தை தெரிவித்தனர். எம்.எல்.ஏ.க்களின் கருத்து முதல்-மந்திரி பதவி மீது கண் வைத்து உள்ள டி.கே.சிவக்குமாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த முதல்-மந்திரி சித்தராமையா

  இந்த நிலையில் கொப்பலை சேர்ந்த மஞ்சுநாத் என்ற விவசாயி தனது மகனுக்கு சித்தராமையா என்று பெயர் சூட்டி அனைவரும் வியப்படைய செய்தார். சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று தனது விருப்பத்தையும் அவர் கூறினார்.

  தற்போது மாட்டின் மீது அடுத்த முதல்-மந்திரி சித்தராமையா என்று அவரது ஆதரவாளர்கள் வாசகம் எழுதி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
  கதக் அருகே உள்ளது திம்மாபுரா கிராமம். இந்த கிராமத்தில் கரபவுர்ணமியையொட்டி நேற்று விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் மாடுகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது ஒரு மாட்டின் மீது அடுத்த முதல்-மந்திரி சித்தராமையா என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது. இதனை அவரது ஆதரவாளர்கள் எழுதி இருந்தனர். அந்த மாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சிலர் அந்த மாட்டை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Next Story