துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தினசரி ஊதியமாக ரூ.510 கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்
தினசரி ஊதியமாக ரூ.510 கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) தலைவர் பழனிசாமி, செயலாளர் ரங்கராஜ் தலைமையில் மாநகராட்சி பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் நேற்று காலை மாநகராட்சி அலுவலகம் வந்தனர்.
இரண்டு மாத சம்பள பாக்கியை வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகம் எதிரே தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 மாத ஊதியம் பாக்கி
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடியிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகராட்சியில் 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.510 கலெக்டர் உத்தரவுப்படி வழங்கவில்லை. அதோடு மாதாமாதம் ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை. குறிப்பாக முதலாவது மண்டலத்தில் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு கடந்த ஏப்ரல், மே மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.
அரசு அறிவித்துள்ள அரசாணைப்படி ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பணி செய்யும் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊக்கத்தொகை
இதுகுறித்து ஏற்கனவே மனு கொடுத்தும் ஊதியம் வழங்காமல் உள்ளது. கொரோனா காலத்தில் அர்ப்பணிப்போடு பணி செய்த தொழிலாளர்களுக்கு உடனடியாக கலெக்டர் அறிவித்தபடி தினசரி ஊதியமாக ரூ.510-ஐ கணக்கிட்டு இரண்டு மாத ஊதியம் வழங்கவும், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா பணி ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story