கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் போராட்டம்


கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் போராட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2021 3:15 AM IST (Updated: 26 Jun 2021 3:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களை திறக்க வலியுறுத்தி தென்காசி மாவட்டத்தில் இந்து முன்னணியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

தென்காசி:
தமிழகத்தில் அனைத்து கோவில்களையும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் கோவில் முன்பு சூடம் ஏற்றினர். கோவில்களை திறக்க வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். தென்காசி நகர தலைவர் நாராயணன், துணைத்தலைவர் சேகர், நகர செயற்குழு உறுப்பினர் மாரி, இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட தலைவர் கோமதி சங்கர், பொறுப்பாளர் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாவூர்சத்திரம்- செங்கோட்டை
கீழப்பாவூரில் உள்ள பழமைவாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் முன்பு நடந்த போராட்டத்துக்கு, இந்து முன்னணி மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் வக்கீல் எம்.பி.சாக்ரடீஸ் தலைமை தாங்கினார். கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

செங்கோட்டை வண்டிமறிச்சி அம்மன் கோவில் முன்பு நடந்த போராட்டத்துக்கு நகர தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். போராட்டத்தில் துணை தலைவர் முருகன், நகர பொதுச்செயலாளர் சுரேஷ், நகர செயலாளர் இசக்கிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் வீரகேரளம்புதூர், சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

Next Story