கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது


கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 26 Jun 2021 3:17 AM IST (Updated: 26 Jun 2021 3:17 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கஞ்சா வியாபாரியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

திருப்பூர்
திருப்பூரில் கஞ்சா வியாபாரியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 
கஞ்சா வியாபாரி
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பவானி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி கடந்த 1-ந் தேதி திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த தேனி மாவட்டம் உத்தமபாளையம் வடக்குபட்டியைச் சேர்ந்த அறிவுச்செல்வன் (வயது 43) என்பவரிடமிருந்து 5 கிலோ 250 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது. இவர் திருப்பூர் கோல்டன் நகர் பவானி நகரில் தங்கியிருந்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டம்
கஞ்சா உபயோகிப்போரின் வாழ்க்கை சீரழிவதுடன், குறிப்பாக கல்லூரி மாணவர்கள், இளைஞர் சமுதாயம் மற்றும் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை சீரழிகிறது. பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பு குந்தகம் விளைவிக்கும் வகையில் போதை மருந்து மனநிலை பாதிப்பு சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அறிவுச்செல்வனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார்.
அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள அறிவுச்செல்வனிடம் ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை போலீசார் நேற்று வழங்கினார்கள்.
30 பேர் கைது
திருப்பூர் மாநகரில் இதுவரை பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 30 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Next Story