நந்திவரத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
நந்திவரத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் நந்தீஸ்வரர் காலனி பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 45), கூலித்தொழிலாளி, இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். சிவானந்தம் மனைவியை பலமுறை கூப்பிட்டும் வரவில்லை.
இதனால் மனமுடைந்த சிவானந்தம் நேற்று முன்தினம் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துகொண்டார்.
உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story