5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொலைத்தொடர்பு துறை சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்


5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொலைத்தொடர்பு துறை சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2021 8:55 AM IST (Updated: 26 Jun 2021 8:55 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில், 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொலைத்தொடர்பு துறை சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், 

திருவள்ளூரில் உள்ள தொலைபேசி இணைப்பக வளாகம் முன்பு நேற்று 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய தேசிய தொலை தொடர்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மூத்த துணைத் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ராமசாமி, துணை பொது செயலாளர் இளங்கோவன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திரளான தொலை தொடர்புத்துறை ஊழியர்கள் கலந்துகொண்டு பி.எஸ்.என்.எல் 4-ஜி மொபைல் சேவையை வழங்க உடனடியாக அனுமதிக்க வேண்டும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் அரசின் புத்தாக்க திட்டம் அமுல் ஆகிவிட்டதால் 2017 ஜனவரி முதல் அளிக்க வேண்டிய ஊதிய மாற்றத்தை தாமதமின்றி அமலாக்க வேண்டும், ஊழியரின் ஓய்வு ஊதியத்திற்காக மத்திய அரசு பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் விதிகளுக்குப் புறம்பாக வசூலிக்கும் அதிகபட்ச தொகையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Next Story