ஜீப் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
கம்பத்தில் ஜீப் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம்:
கம்பம் நந்தகோபாலன் கோவில் தெற்கு தெருவில் வசிப்பவர் சுரேஷ் (வயது 40). ஜீப் டிரைவர். இவரது மனைவி கல்பனா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் வீட்டில் தனியாக வசித்து வந்த அவர் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருந்தார். மேலும் கடந்த சில நாட்களாக இவர் உடல்நிலை சரியில்லாமல் மன உளைச்சலுடன் இருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் சுரேஷ் வீட்டின் கதவு திறக்கப்பட வில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சுரேஷ் வீட்டின் விட்டத்தில் கயிறை மாட்டி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story